கீழக்கரையில் மீண்டும் தலை தூக்கும் நாய் தொல்லை…

கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள இன்று (19-07-2017) காலை 10.00 மணியளவில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம், பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன், கீழக்கரை மக்கள் பொது தளத்தின் ஆம்புலன்ஸ் கமிட்டி தலைவரும், கீழக்கரை கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளரும், சமூக ஆர்வலருமான முகம்மது அஜிகர், மக்கள் டீம் தளத்தின் ஒருங்கினைப்பாளர் அப்துல் காதர், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பசீர் அகமது, சமூக ஆர்வலர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் நாய் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி நேரில் மனு அளித்தனர்.

இப்பிரச்சினைக்கு  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக நகராட்சி ஆணையர் உறுதி அளித்து இருக்கின்றார்.