கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆங்கில தகவல் பரிமாற்ற பயிற்சி முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை- தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியில் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் சங்கம் இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியோர்இணைந்து நடத்தும் “ஆங்கில தகவல் பரிமாற்ற பயிற்சி முகாம்” 17.07.2017 மற்றும் 18.07.2017 ஆகிய நாட்களில் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி முகாமை முனைவர் சுலைகா ஷகில், ஆங்கிலத் துறைத் இறைவணக்கத்துடன் சிறப்புறையாற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா தாவுத் தலைமையுரையாற்றினார். துவக்க உரையை இராமநாதபுர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மே. முனுசாமி துவக்கவுரையாற்றினார். பயிற்சியாளர் பிரமில்லா லௌவ்,பிரிட்டிஷ் கவுன்சிலர், சென்னை பயிற்சியை தொடங்க, ராதிகா, துணைப்பேராசிரியர் நன்றியுரை வழங்க முகாம் துவக்க விழா இனிதே நிறைவுற்றது.