இராமநாதபுரத்தில் மதக்கலவரத்தை தூண்டுகின்ற பாஜக தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (16.07.2017) இராமநாதபுரத்தில் மதக்கலவரத்தை தூண்டி, சமூக அமைதியை கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்தும், மதக் கலவரத்தை தூண்டும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சி சார்பில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்பாஸ் ஆலிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருச்சி. வேலுச்சாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மது ரசின் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் முஜீபுர் ரஹ்மான், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சோமு, விமன் இந்தியாவின் மாநில பொருளாளர் தௌலத்தியா, SDTU மாநில பொருளாளர் கார்மேகம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் வஹாப், பொதுச்செயலாளர் அஜ்மல் செரீப், செயலாளர் செய்யது இப்ராஹிம், பொருளாளர் ரபீக் அகமது, மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது இஸ்ஹாக், துணைத்தலைவர் நூர் ஜியாவுதீன், பொதுச் செயலாளர் அஸ்கர் அலி, காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் காஜா நஜ்முதீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஹாஜா அனீஸ் உள்ளிட்ட சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.