அமைதியைக் கெடுக்கும் பாசிச சக்திகளை எதிர்த்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..

அறிவிப்பு

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி, சமூக அமைதியை கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து எஸ். டி.பி. ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறுகிறது.

நாள் : 16. 07. 2017 ஞாயிறு

நேரம் : மாலை 04. 00 மணிக்கு

இடம்: சந்தை திடல் , இராமநாதபுரம்.

சிறப்புரை: கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநிலத்தலைவர், எஸ். டி. பி. ஐ கட்சி.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வைக்கப்படுகிறது…

தமிழக அரசே ! காவல்துறையே !!

-தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலிலும், பொதுக்கூட்டங்களிலும் பிரச்சாரம் செய்கின்ற ஹெச்.ராஜா, ராகவன், கல்யாணராமன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் !

-இராமநாதபுரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி அச்சுறுத்தியும் பேசிய பாஜக கோட்டப்பொருப்பாளர் ராஜேந்திரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் !

-இராமநாதபுரம் தங்கப்பா நகரில் மதரஸா மீதும், முஸ்லிம்கள் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு, மதக்கலவரத்தை ஏற்படுத்திய பாஜக நகர் செயலாளர் அஸ்வினை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் !

-இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கு .

ஆர்ப்பாட்டம் சம்பந்தமான தொடர்புக்கு:
9629371108, 7667404813

கீழக்கரை நகர், எஸ்.டி.பி.ஐ. கட்சி  சார்பாக ஆர்ப்பாட்டத்திற்கு வாகனம் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள்  ஜும்மா பள்ளி முன்புறப் பகுதியில் இருந்து மாலை 3.00 மணியளவில் கிளம்பும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  வாகனம் தொடர்பான மேல் விவரங்களுக்கு குதுபு ஜமான், நகர் தலைவரை 9659612223 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரபை
9443317665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கண்டன ஆர்ப்பட்டடம் சம்பந்தமாக தொடர் தெருமுனை பிரச்சாரமும் கீழக்கரையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.