கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளயில் சுகாதார விழிப்புணர்வு முகாம்..

கீழக்கரை கண்ணாடி வாப்பா  பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மத்தியில் சுகாதார இந்தியா திட்டம் ( SWATCH BHARATH MISSION) விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரம் பற்றியும்இ கீழக்கரையை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக எவ்வாறு உருவாக்குவது போன்ற விசயங்கள் பரிமாறப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் நீலம் மற்றும் பச்சை நிற தொட்டிகளில் உலர்ந்த மற்றும் ஈரக்கழிவுகளை தரம் பிரிப்பது பற்றிய விளக்கமும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தியின் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.