நீர்த்துப் போன நீர் பந்தல்கள்..

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல இடங்களில் நகராட்சி நிர்வாகம் உட்பட பல சமுதாய அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு நீர் பந்தல், மோர் பந்தல், சர்பத் பந்தல், ஜூஸ் பந்தல் என பல வகையான பந்தல்கள் அமைத்தன, மக்களின் தாக்கத்தையும் தீர்த்தன் சில நாட்கள் மட்டும். வெயில் உக்கிரம் குறைந்த பாடில்லை, ஆனால் உருவான பந்தல்கள் உருமாறி விட்டன.

கீழக்கரையில் வெயிலுக்கு உருவான சில பந்தல்களை பார்வையிடச் சென்றோம். நகராட்சியால் அமைக்கப்பட்ட நீர் பந்தல் இரண்டு சக்கர வாகனங்களுக்கான நிறுத்தமாக மாறியிருந்தது, இன்னும் சில பந்தல்களோ தர்பூசணி வியாபார ஸ்தலமாகவும், இன்னும் பல பந்தல்கள் உருவம் மாறி சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகளாக மாறியிருந்தது. எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறுகிறதா என்று அமைப்பாளர்கள் கவனிப்பார்களா??

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. சமூக சேவைகள் உண்மையில் தியாக உணர்வோடு செயல்ப்படுத்தபடவேண்டும்.பல சேவைகள் காணல் நீராகவே இருக்கின்றது.கீழை நியூஸ் நிர்வாகத்தினர் குறிப்பிடுவது போல அமைப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Comments are closed.