அரசு அறிவிப்பைக் காற்றில் பறக்க விடும் மருத்துவர்கள்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக மத்திய அரசால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, அதாவது மருத்துவர்கள் மருந்துகளின் மூலப் பெயர்களை மட்டுமே எழுத வேண்டும், தயாரிக்கும் நிறுவனம் சந்தைப்படுத்தும் பெயரை மருத்துவச் சீட்டில் எழுதக்கூடாது என்பதாகும். இதன் மூலம் மருந்து வாங்கும் நபர்கள் தங்களுடைய பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு மருந்துகள் வாங்க முடியும். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் அந்த அறிவிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.

ஆனால் அதையும் தாண்டி பல மருத்துவர்கள் அவர்களுடைய மருத்துவமனைகளில் முறையில்லாமல் நடத்தப்படும் மருந்தகங்களில் நோயாளிகளை மருந்து வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அடுத்தவர்கள் யாருக்கும் புரியாத வண்ணம் எழுதுவது மிகவும் வேதனையான விசயம். மேலே கொடுக்கப்பட்டுள்ள மருத்து சீட்டு ஒரு உதாரணம், அவ்வாறு உங்களுக்கு வாசிக்க முடிந்தால் நீங்கள் அதி புத்திசாலிதான்…கீழை நியூஸ் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு இது சம்பந்தமாக வெளியிட்ட செய்தி உங்கள் பார்வைக்கு …

விலை குறைவான ‘ஜெனரிக்’ மருந்துகளை மருந்து சீட்டில் எழுத தவறினால் கடும் நடவடிக்கை – இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை

புனித ரமலான் வாழ்த்துக்கள்..