கீழக்கரையில் சுற்று சூழல் தின விழா பேரணி..

கீழக்கரையில் இன்று (10-07-2017) தேசிய பசுமைப் படை மற்றும் நிஷா ஃபவுண்டேஷன் இணைந்நு நடத்திய சுற்று சூழல் பேரணி சிறப்பாக நடைபெற்றது.

இப்பேரணியில் ஹமீதியா ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி, முகைதீனியா பள்ளி, மக்தூமியா பள்ளி, இஸ்லாமியா பள்ளிகள் மற்றும் ஹைரத்துல் ஜலாலியா ஆகிய பள்ளி மாணவ, மாணவிகள் கலந்நு கொண்டனர். இப்பேரணியை கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.”இயற்கையோடு மக்களை இணைப்போம்” என்ற நோக்கத்துடன் இப்பேரணியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்நு கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கினைப்பாளர் பெர்னான்டஸ் தலைமை வகித்தார், திருப்பலானி ஒன்றிய பசுமைப்படை ஒன்றியத் தலைவர் தக்கவை பீர் முகம்மது முன்னிலை வகித்தார், கீழக்கரை டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் நிஷா ஃபவுண்டேஷன் துணைத்தலைவர் நெய்னா முகம்மது, செயலாளர் சேகு ஆலிம்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு வடக்குத் தெரு இடி மின்னல் ஹாஜா சார்பாக குளிர் பானங்கள் வழங்கப்பட்டது.