கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக சிறப்பு பேரணி..

கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் சார்பாக விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளைய வாக்காளர்களை பட்டியலில் பெயர் சேர்த்தல் பற்றி சிறப்பு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தொடங்கி கடற்கரையில் முடிந்தது. இதில் வருவாய் கோட்ட ஆட்சியர் பேபி, வட்டாச்சியர் இளங்கோ,தேர்தல் பிரிவு அதிகாரி சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச் செல்வம், கருப்பையா, கிராம உதவியாளர் பாண்டி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.