கீழக்கரையா??.. குப்பைக்கரையா??

கீழக்கரையில் நகராட்சியுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனமும் குப்பைகளை அள்ளுவது வழக்கம்.  ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அறியப்படாத காரணங்களால் குப்பை அள்ளும் வாகனம் வரவில்லை.

குப்பை அள்ளும் வாகனம் வராத காரணத்தால் பல இடங்களில் குப்பைகள் நிரம்பி வழிகிறது.  ஏற்கனவே நோய்களுக்கு பஞ்சமில்லை, இது போன்ற குப்பைத் தேக்கம் மேலும் நோய்கள் உருவாக காரணமாகிவிடும்.  எத்தனை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினாலும் அதற்கு தகுந்தாற்போல் நகராட்சி கட்டமைப்புகளையும்  உருவாக்கினால்தான் நோக்கம் நிறைவேறும்.

இது சம்பந்தமாக கீழக்கரை வெல்பேர் அசோசியனை அணுகி விசாரித்த பொழுது குப்பை எடுக்கும் ஆட்கள் பணிக்கு வராததால் தாமதமாகிவிட்டது, இன்று குறைந்த நபர்களை வைத்து சில இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் வழக்கம் போல் பணிகள் தொடரும் என்றார்.