நெரிசலில் தவிக்கும் கீழக்கரை சாலை.. அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்.. ஜரூராக நடைபெறும் வாகன கட்டண வசூல்..

கீழக்கரை மெயின் ரோடான வள்ளல் சீதக்காதி சாலை பெருநாள் தொடங்கிய நாள் முதல் போக்குவரத்து நெரிசலில் மூழ்க ஆரம்பித்து விட்டது. நோன்பு காலங்களில் வருகையில்லாமல் இருந்த கேரளா மாநில யாத்ரீகர்கள் பெருநாள் தொடங்கிய நாள் முதல் வர ஆரம்பித்ததுதான் மிக முக்கிய காரணம். இதனால் பெருநாள் கொண்டுவதற்காக வந்தவர்கள் முதல் உள்ளூர்வாசிகள் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து, சங்குவெட்டித் தெருவைச் சேர்ந்த சீனி கூறுகையில் ” கேரள வாகனங்களாலே கீழக்கரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்குரோட்டில் அத்துமீறி வாங்கும் வாகன கட்டண வசூலில் ஈடுபாடுவோர் நடுரோட்டில் நிறுத்துவதில் ஆரம்பித்து VAO அலுவலகம், நகராட்சி, இந்து பஜார், E C ஜெராக்ஸ் கார்னர், குத்பா பள்ளி, கடற்கரை பெட்ரோல் பங்க் வரைக்கும் போக்குவரத்து நெருக்கடியே. நேற்று 1 நம்பர் டவுன் பஸ் ஊருக்குள் வராததால் உள்ளூர் பொதுமக்கள் நெடுநேரம் காத்திருந்துவிட்டு ஆட்டோ பிடித்து புலம்பியவாறு சென்றது வேதனையாக இருந்தது. இதற்கு உடனடி தீர்வுகாண வழி செய்ய வேண்டுமென்றார்.”

கீழக்கரைக்கு வரும் கேரள வாகனங்களில் சிறிய ரக வாகனங்களை தவிர மற்ற பெரிய வாகனங்களை ஊருக்குள் வராமல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தலாம், இல்லையெனில் DSP அலுவலகம் அருகே நிறுத்தலாம் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..