திருப்புல்லாணி மேலப்புதுக்குடியில் குர்ஆன், ஹதீஸ் போட்டி..

திருப்புல்லாணி மேலப்புதுக்குடி தமுமுக கிளையின் சார்பாக நடந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியை மேலப்புதுக்குடி ஆலிம் சஃபர் சாதிக் மன்பயி கிராத் ஓதி தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆலிம் அணீஸ் ரகுமான் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் தமுமுக முன்னாள் உலாமா அணி மாவட்ட செயலாளர் ஹனீப் ராஷாதி சிறப்பரையாற்றினார். நிகழ்ச்சியின் நன்றியுரையை தமுமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரைஸ் இப்ராஹிம் வழங்கினார். மேலும் விழாவின் ஏற்பாடுகளை  தமுமுக கிளை சகோதரர்கள் சிறப்பாக  செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.