கீழக்கரையில் விரைவில் புதிய நிரந்தர தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம்… நிதி ஒதுக்கி அரசாணை..

கீழக்கரை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலுகா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தின் பணிகள் தற்சமயம் உள்ள நகராட்சி அலுவலத்திலேயே நடைபற்று வந்தது. ஆகையால் புதிதாக நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கும் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் முழுமையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பணிகளை மேற்கொள்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் சுமார் 81,15,49,000/- செலவில் மொத்தம் 31 புதிய தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் கீழக்கரையில் நிரந்தர தாலுகா அலுவலகம் அமைக்க உத்தேசமாக 2,39,00,000/- மற்றும் தாசில்தார் அலைவலகத்திற்கு 29,00,000/- ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய அலுவலகம் அமைய பெரும் முயற்சிகள் எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், நிதி ஒதுக்கி உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கும், அலுவலகம் அமைக்க நிலத்தை வழங்கி உதவிய நல்லுள்ளங்களுக்கும் கீழக்கரை தாசில்தார் தமீம்ராசா நன்றிகளை தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..