கீழக்கரையில் மீண்டும் இரண்டு சக்கர வாகன விபத்து..

கீழக்கரையில் இன்று (26/06/2017) மான் குட்டி அப்பா தர்ஹா அருகே இரண்டு சக்கர வாகன விபத்தில் வாலிபர் பலியாகியுள்ளார். பலியானவரின் பெயர் ராஜபாண்டி, தகப்பனார். குப்புசாமி.  இவர் புதுமடத்தைச் சார்ந்தவர்.

இவரின் உடல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணத்தை விசாரனை செய்து வருகிறார்கள்.