விபத்துக்கள் பாடம் தராதோ?? – சிறப்பு விழிப்புணர்வு கட்டுரை..

சிறப்பக் கட்டுரை

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…..

அந்தோ பரிதாபம்…

சுப்ஹானல்லாஹ்…

எத்தனை எத்தனை உபதேசங்கள்….

எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்…..

ஆனாலும் மீண்டுமொரு “ரமலான்” விபத்து எனும் போது மனது பதை பதைத்து போகிறது….

வயது 17 தான்….

இது போன்ற பிள்ளைகளை பற்றி சொல்லவேண்டுமானால் இரு விதமாக சொல்லலாம்..

ஒன்று பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரிக்காதது..

இரண்டாவது பெற்றோர்கள் எச்சரிக்கின்ற போதும் பிள்ளைகள் உதாசீனப்படுத்துவது…

இரண்டில் ஏதுவாக இருந்தாலும் இரண்டுமே கையிலெடுக்க கூடாத முறைகளல்லவா….

சென்ற வருட விபத்தே இன்னும் நம் மனதை விட்டு நீங்கவில்லை….

ஆனால் அந்த விபத்தை நினைத்து ஏங்கி தவித்த அவர்களின் நண்பர் கூட்டத்திற்கு இவ்வளவு சீக்கிரத்தில் அவர்களின் மனதை விட்டு இந்த விபத்து நீங்கி விட்டதோ….

ஏனென்றால் இன்னும் கூட ராமலானின் நாள்களை எப்படி கழிக்க வேண்டும் என்று அவர்கள் பாடம் கற்கவில்லையே….

இன்னும் கூட இரவு நேரங்களில் விழித்துருந்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார்கள்….

ஒவ்வொரு குட்டி சுவர்களின் மீதும் அமர்ந்து வெட்டு பேச்சுகளில் ஈடுபடுகிறார்கள்….

கைப்பேசிகளில் முழு நேரத்தையும் வீணாக்குகிறார்கள்….

சென்ற வருடம் தன் நண்பனுக்கு ஏற்பட்ட நிலையை மறந்து மீண்டும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுகிறார்கள்…..

இளைஞர்களே…..

உங்களுக்கு உங்கள் பெற்றோர்களின் மூலமும் மார்க்க அறிஞர்களின் மூலமும் சொல்லப்படுகின்ற உபதேசங்களை தயவு செய்து காதுகளில் வாங்கி செயல்படுத்துங்கள்..

உபதேசம் செய்யாத பெற்றோர்களே….

ராமலானை எப்படி கழிக்க வேண்டுமென்று தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திடுங்கள்….

இது போன்ற விபத்துகள் நம் பார்வைகளுக்கு மட்டும் பரிதாபமாக அமைந்து விடக் கூடாது…

நமது வாழ்க்கைகளுக்கும் நிச்சயமாக ஒரு பாடமாக அமைந்திட வேண்டும்…..

இப்படியே சொல்லி சொல்லி இரண்டாவது ராமலானயும் கடந்து முடிக்கப் போகிறோமே….

இனியும் பாடம் கற்று கொல்லாதவர்களை என்னவென்று சொல்வது…….!!!

இப்பொழுது விபத்தில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தியுங்கள்….

கண்ணீர் விட்டு பிரார்த்தித்த அந்த நொடியிலிருந்து இனியாவது பாடங்களை கற்று கொள்ளுங்கள்…..

ஆக்கம்.  உம்மு அஃப்ஸான்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..