வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரம் ஆன 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம்…

கீழக்கரையில் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரம் ஆன 24 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (20.06.2017) கீழக்கரை வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 24 அம்ச கோரிக்கைகளான:-
1)புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும்.
2)ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் .
3)காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.                   4)24மணி நேரமும் அல்லும் பகலும் பணிபுரியும் வருவாய்த் துறையை பொது நிர்வாகத் துறையாக அறிவித்திட வேண்டும்.
5)வருவாய்த்துறை அலுவலர்களின் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு TNROA கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஊதியக்குழுவில் ஊதியங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
6)நேரடி துணை தாசில்தார் பணியிடம் தேர்வு செய்வதை கைவிட வேண்டும்.
7)மஊழியர் விரோத போக்குடன் செயல்படும் CRAவை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும்.
8)ஒராண்டு பணிமுடித்த கலெக்டர்களை பணிமாறுதல் செய்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
9)36 விதமான சான்றுகளை வழங்கிட இணையதள பயன்பாட்டுக் கட்டணம் வழங்கிட வேண்டும்.
10)பிர்க்கா வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை துணை தாசில்தார் நிலைக்கு தரம் உயர்த்திட வேண்டும்.
11)ஸ்மார்ட் வழங்கும் பணிக்கு கால அவகாசமும் செலவினத் தொகையும் வழங்கிட வேண்டும்.
12)மாவட்ட மாறுதல் கோரிக்கைகள் மீது உடனடியாக உத்தரவிட வேண்டும்.
13)சமூக பாதுகாப்புத் திட்டங்களை செம்மையாக நடத்திட கண்காணிப்பாளர் பணியிடமும் கணக்கு அலுவலர் பணியிடமும் வழங்கிட வேண்டும்.
14)தேர்தல் துணை தாசில்தார் பணி இடங்களையும் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடங்களையும் தாசில்தார் நிலைக்கு உயர்த்திட வேண்டும்.
15)ஒரே தேர்வில் தேர்வாகும் வருவாய்த்துறை நேரடி உதவியாளர்களுக்கும் பிறதுறைகள் போலே ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்.
16)பிறப்பு இறப்பு சான்று வழங்கிடவும் நில உச்சவரம்பு சட்டத்ததை அமல்படுத்திடவும் புதிய பணியிடங்களை வழங்கிட வேண்டும்.
17)வறட்சி மழை வெள்ளம் போன்ற பேரிடர் பணிகளை மேற்கொண்டிட துணை ஆட்சியர் தலைமையில் அலுவலகமும் அலுவலர்களும் வழங்கிட வேண்டும்.
18)நேரடி துணை ஆட்சியர்களுக்கும் பாரபட்சமின்றி APA LAND மற்றும் SDC(SSS) போன்ற பணியிடங்களும் வழங்கிட வேண்டும் 19)மாறி வரும் கால மாற்றத்திற்கேற்ப வழக்குகளை கையாண்டிட தாலூகா தோறும் தாசில்தார் பணியிடங்கள் தேவைப்படும் நிதியுடன் வழங்கிட வேண்டும்.
20) தேர்தல் சிறப்புத்திட்டங்கள் அமலாக்கம் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நிலமெடுப்பு தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும் .
21)காலமாற்றத்திற்கேற்ப புதிய மாவட்டங்கள் கோட்டங்கள் வட்டங்கள் உருவாக்கிட வேண்டும் .
22)இ சேவை மையங்களை கண்காணித்திட தாலுகா தோறும் தாசில்தார் நிலையில் அலுவலர்களுடன் அலுவலகத்தை நிர்மாணித்திட வேண்டும்.
23)இணையதள மின் ஆளுமைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கிட வேண்டும்.
24)அரசாணைகள் வந்த போதும் பூர்த்தி செய்யாமல் உள்ள வாட்ச்மேன் மசால்ஜி மற்றும் தோட்டக்காரர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுருத்தி உணவு இடைவேளை நேரத்தில் மாவட்ட செயலாளர் கே எம் தமிம்ராஜா தலைமையிலும், வட்டக்கிளை செயலாளர் புல்லாணி முன்னிலையிலும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தாசில்தார் இளங்கோவன், தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார், வட்டத் தலைமை நில அளவர் ராமமூர்த்தி, இணைச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் விநாயகம், முருகானந்தம் உட்பட அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் உள்ள அனைவரும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட போராட்ட நடவடிக்கைகளை நடத்தினர்.