கீழக்கரையில் புதிய உதயம் ஜமான் பிரதர்ஸ்..

கீழக்கரையில் இருந்து வெளியூருக்கு சென்று பொருட்கள் வாங்க சென்ற காலம் மாறி தற்பொழுது கீழக்கரையை நோக்கி சுற்றுவட்டார மக்கள் பொருட்கள் வாங்க தொடங்கியுள்ளார்கள்.  அந்த அளவுக்கு மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களுக்கான சில்லரை மற்றும் மொத்த கடைகள் கீழக்கரை நகரில் தொடங்கப்பட்டு உள்ளன. வீட்டு உணவுப் பொருட்களில் தொடங்கி அன்றாட பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும் வகையில் வியாபார ஸ்தலங்கள் உருவாகி வருகின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் உருவாகியுள்ளது ஜமான் பிரதர்ஸ்.  இங்கு வீட்டிற்கு மற்றும் அனைத்து தேவைகளுக்கும் உபயோகப்படும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனைக்கு உள்ளன.  இந்தக் கடை கஜினி டீ கடை அருகில் திறக்கப்பட்டுள்ளது.  ஒரு காலத்தில் சிறிய ப்ளாஸ்டிக் வாளி வாங்குவதாக இருந்தால் கூட சென்னைக்கு சொல்லி விட்ட காலம் மாறி இன்று கண்ணுக்கு எட்டிய தொலைவில் அனைத்துப் பொருட்களும் ஊரிலேயே கிடைப்பது மிகவும் சந்தோசப்படக் கூடிய விசயம்.

இத்தொழிலை தொடங்கியிருக்கும் சகோதரர்களுக்கு கீழை நியூஸ் வோர்ல்ட் சார்பாக வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.