கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..

கீழ்க்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 16-06-2017 அன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளைத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி முஹம்மது அஃபரின் பானு கிராத்துடன் தொடங்கியது. இராமநாதபுரம் ஆட்சித் தலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கு சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் ஹாலித் ஏ.கே அஹமது புகாரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு மார்க்க சொற்பொழிவை கல்லூரியின் இமாம் அஹமது அமானி வழங்கினார். அதைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.