கீழக்கரை நகருக்குள் நுழைய எந்த வாகன நுழைவு கட்டணமும் கிடையாது.. ஆணையர் திட்டவட்டம்…அறிவிப்பு பலகை வைக்கப்படும்..

இராமநாதபுரம் மற்றும் ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நகருக்கு வாகனங்கள் நுழையும் முக்கு ரோடு பகுதியில் குத்தகைக்காரர்கள் என்ற போர்வையில் வெளியூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் வசூல் செய்யப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் சார்ந்த அமைப்புகள் கண்டனம் எழுப்பினார்கள், நகராட்சிக்கு புகாரும் தெரிவித்தனர். ஆனால் புகார் தெரிவித்த சில நாட்களுக்கு குத்தகைக்காரர்கள் காணாமல் போவார்கள், ஆனால் மீண்டும் சில நாட்களில் முளைத்து விடுவார்கள்.

இது சம்பந்தமாக கீழக்கரைக்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆணையரிடம் கீழைநியூஸ் வோர்ல்ட் சார்பாக கோரிக்கையுடன், விளக்கம் கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் கூறியதாவது, நகருக்குள் நுழைவதற்கு எந்த வகையான கட்டணமும் கிடையாது, கடந்த காலங்களில் காய்கறி மார்கெட் வளாகத்திற்கு வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்காக மட்டுமே குத்தகை விடப்பட்டது, ஆனால் குத்தகை எடுத்த நபர் நேரடி பார்வையில் இல்லாமல் வேறு நபர் மூலம் இந்தப் பணியை மேற்கொண்டதால் இந்த குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தக் குத்தகை காலமும் வரும் மார்ச் மாதத்துடன் காலாவதியாகிவிடும், அத்துடன் ரத்து செய்யப்படும் என்றார். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்களையும் அழைத்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்றார். அத்துடன் இனி வரக்கூடிய காலங்களில் வெளியூரில் இருந்து காய்கறி மார்கெட் வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களுக்கு வசூல் செய்தால், பணம் கொடுக்க தேவையில்லை நேரடியாக ஆணையரை தொடர்பு கொள்ளலாம், இது சம்பந்தமான தொலைபேசி எண்ணுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்தக் காரியத்தை கீழக்கரை ஆணையர் உடனடியாக செயல்படுத்துவது மூலம் அடாவடிக் கும்பலிடம் இருந்து வெளியூர் வாகன ஒட்டிகளுக்கு விடுதலை கிடைக்கும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..