துபாயில் சென்னை சதக் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னை சதக் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் 1999-2016 வரை படித்த மாணவர்களின் சந்திப்பு துபாய் தேரா பகுதியில் உள்ள HOTEL RAIN TREEல் ஜுன் 16ம் தேதி, வெள்ளிக்கிழமை ரமலான் மாத இஃப்தார் விருந்து நிகழ்ச்சியுடன் மாலை 05.00 மணி முதல் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பல் வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் தங்களின் நண்பர்களை மகிழ்ச்சியுடன் சந்தித்து தாங்கள் கடந்து வந்த பாதைகளை பகிர்ந்து கொண்டார்கள். மேலும் தற்சமயம் அவர்கள் வேலை பார்க்கும் சூழல் மற்றும் பதவிகளைப் பற்றியும் மிக ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். அது போன்ற சந்திப்பு கடந்த நான்கு வருடங்களாக அமீரகத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.