Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சங்க்பரிவாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமைந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பாக நடந்த இஃப்தார் நிகழ்ச்சி…

சங்க்பரிவாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமைந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பாக நடந்த இஃப்தார் நிகழ்ச்சி…

by Mohamed
 

கடந்த வருடம் ஜவர்ஹர்லால் பல்கலை கழகத்தில் MSC (பையோடெக்னாலஜி) முதலாம் ஆண்டு படித்து வந்த நஜீப் முஹம்மது என்ற மாணவனுக்கும் ABVP அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 15 அக்டோபர் 2016 அன்று விடுதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார்.

அதனை தொடர்ந்து தாத்ரியில் வசித்து வந்த முஹம்மது அஹ்லாக் என்ற முதியவரை மாட்டிறைச்சி வைத்து இருந்ததாக பசு காவலர்கள் என்று சொல்லப்படும் காவி பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

அதே போல் ஆல்வாரில் ஏப்ரல் 1 அன்று 55 வயது மதிக்கத்தக்க பெஹ்லுகான் என்பவர் லாரியில் மாடுகளை பால் பண்ணைக்கு ஏற்றி செல்லும் போது பசு பாதுகாவலர்கள் அந்த வாகனத்தை இடைமறித்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.இது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் மத்தியில் ப.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டு சிறுபான்மையினர் பாதுகாபற்ற சூழலை உணர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமிய மாணவர் அமைப்பு (SIO) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!