நண்பர்களாகிய ஆட்டோ ஓட்டுனர்கள் … அனுமதியில்லாத ஆட்டோ நிலையத்தால் சாலையில் போக்குவரத்துக்கு பகைவர்களாகிறார்கள்…

கீழக்கரையில் பிரதான சாலை வள்ளல் சீதக்காதி சாலையாகும்.  காலை முதல் மாலை வரை எப்பொழுதும் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும்.  இச்சாலையில்தான் அரசு அலுவலகங்கள், முக்கியமான வியாபார ஸ்தலங்கள், பள்ளிகள் என நிறைந்து உள்ளது.  ஆனால் இச்சாலையை அகலப்படுத்த வாய்ப்பில்லாத நிலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இந்த தினசரி நெரிசலுடன் முறையில்லாமல் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் எந்த அனுமதியும் இல்லாமல் முளைக்கும் ஆட்டோ நிலையங்கள் போக்குவரத்து நெரிசல்களை அதிகப்படுத்துகிறது.  இதனால் போக்குவரத்து இடஞ்சல் மட்டுமல்லாமல் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உருவாகிறது.  மேலும் ரமலான் மாதம் என்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் கடைத்தெருக்களில் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வாகன நெரிசல்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.  இந்தப் பிரச்சினையில் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..