ரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..

சிறப்புக் கட்டுரை..

புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி நோன்பு வைப்பது பரவலாக இப்பொழுது காணப்படுகிறது. நோன்பு வைப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல அமெரிக்க மருத்துவ ஆய்வுகள் வெளிவந்நுள்ளன.

நோன்பு வைப்பதன் மூலம் மன ரீதியான அமைதியான நன்மைகளை அடைவது போல் மருத்துவ ரீதியாக உடலின் பல உறுப்புகளுக்கு நன்மை அளிக்கிறது, குறிப்பாக மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

நோன்பின் வைப்பதால் கிடைக்கும் பயன்கள்; முதலாவதாக நம் உடலில் மாதக் கணக்கில் சேர்ந்து இருக்கும் நச்சுப் பொருளை வெளியேற்றுவதற்கு நோன்பு மிகவும் உதவியாக உள்ளது.அவ்வாறு மாதக் கணக்கில் வீட்டில் மட்டுமல்லாது, வெளியில் உண்ணும் உணஙுகளாகிய பிஸ்கட், சாக்லேட், இனிப்பு பண்டங்கள் போன்ற உணவுப் பொருட்கள் மேம்பட்ட கிளைக்கேட் முடிவு பொருட்களாக  (Advanced Glycated End Products ) மாறி கொழுப்பாக உடலில் தங்கி விடுகிறது. இது போன்ற (AGE’s) நாளுக்கு சுமார் 15 மணி நேரம் ஒரு மாதம் காலம் முழுவதும் நோன்பு இருப்பதனால் நம் உடலில் தங்கி இருக்கும் கெட்டக் கொழுப்புகள் மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேறுவதாக விஞ்ஞானிகள் அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள்.

அடுத்ததாக தேவையில்லாத கொழுப்பையும் உடலில் இருந்து வெளியேற நோன்பு மிகவும் உதவியாக உள்ளது. ஏனென்றால் நோன்பு இருக்கும் போது உடலில் கீட்டோசிஸ் முறை ஆரம்பிக்கிறது அதாவது நோன்பு இருப்பவரின் உடலில் இருந்து முதலில் எல்லா சக்கரையும் (Glucose) வெளியாகிறது அதன் பிறகு உடலுக்கு எனர்ஜி தேவைப்படும் போது கொழுப்பு எனர்ஜியாக மாறுவதை தான் கீட்டோசிஸ் என்று சொல்லப்படுகிறது. நம் உடலில் இரத்தம் மட்டுமின்றி பல பாகங்களில் கொழுப்பு உள்ளது குறிப்பாக சிறு நீரகத்தில் உள்ள விசரல் ஃபேட் (Visceral Fat) கீட்டோசிஸ் மூலம் வெளியேற நோன்பு மிகவும் உதவியாக உள்ளது.

மூன்றாவதாக சக்கரை வியாதி உள்ளவர்களின் இரத்ததில் உள்ள சக்கரை அளவை இயற்கையாக குறைக்க உதவியாக உள்ளது.

நான்காவதாக, மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. ஏனென்றால் பிரைன் டிரைவ்டு நீரோடிராபிக் ஃபேக்டர் (Brain Derived Neurotrophic Factor) அதிகமாக சுரப்பதினால் புதிய செல்கள் உருவாகிறது. ஆகையினால் இயற்கையாகவே மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது.

ஐந்தாவதாக, நோன்பின் காரணமாக உடலில் உள்ள கொலஸ்டிராலின் அளவு இயற்கையாக குறைவதனால் இருதயத்துக்கும் நன்மை பயக்கிறது. அதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.

ஆறாவதாக, அட்ரினல் சுரபி மூலம் கார்டிசோல் (Cortisol) என்ற ஹார்மொன்கள் அனைவருக்கும் சுரக்கிறது. பொதுவாக ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கும் போது மட்டும் கார்டிசோல் ஹார்மோன்கள்  அதிக அளவில் சுரக்கிறது அவ்வாறு சுரப்பதனால் தலை வலி, உடல் வலி, வீக்கங்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோன்பு இருப்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன்கள் இயற்கையான முறையில் குறைவாக சுரப்பதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.

இவ்வாறு பல வகையான நன்மைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோன்பு வைப்பதன் மூலம் அடைவதால் மதம் கடந்த பிற சமுதாயத்தவரும் இதனை கடைபிடிக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது குர்ஆனில் சொல்லப்படும் அனைத்து விசயங்களும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி மனித குலம் அனைவருக்கும் இறக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..