தொடரும் பாம்பன் பாலம் விபத்து, துயிலில் போக்குவரத்து துறை..

இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து விபத்து நடந்த வண்ணம் உள்ளது.

இன்று (8.6.2017) மாலை 7.30 மணியளவில் மீண்டும் பாம்பன் பாலத்தில், இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற SRS என்ற தனியாருக்கு சொந்தமான பஸ்சும், தூத்துகுடியிலிருந்து இராமேஸ்வரம் வந்த (Tavera) காரும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வாகனத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இவ்விபத்து சம்பந்தமாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இத்தொடர் விபத்துக்களை தடுக்கும் வண்ணம் நிரந்தரமான போக்குவரத்து ரோந்து வாகனங்களை நிறுத்தி அதிவேகமாக செல்வோர் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அடிக்கடி நிகழும் விபத்துக்களை தடுக்க முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.