ஏர்வாடி ஊராட்சி பாண்டி ஊரணியில் மண்வெட்டி தூர் வாரும் பணி துவக்கம்..

தமிழக முதல்வரின் திட்டமான விவசாயிகளின் நில மேமம்பாட்டிற்காக ஊரணிகளில் மண்வெட்டி எடுத்தல் பணி தமிழகத்தில் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் நடராஜன் அவர்களின் உத்தரவின் படி திட்ட இயக்குனர்.தனபதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செல்லத்துரைஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஏர்வாடி ஊராட்சியில் பாண்டி ஊரணியில் மண் அள்ளும் பணி நடைபெற்றது.

இப்பணி கடலாடி ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலர். APO மணிமேகலை மற்றும் BDO உம்முல் ஜாமியா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இப்பணிகள் முழுமையாக நிறைவேற்றும் பட்சத்தில் விவசாயிகள் பலர் பயனுற்று மகிழ்ச்சியடைவார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.