மக்களின் நண்பனா?? எதிரியா பாரத வங்கி.. பல நாட்கள் பயன்பாட்டில் இல்லாத ATM இயந்திரம்..

கீழக்கரையில் உள்ள பழமையான வங்கிகளில் ஒன்றானதாகும் பாரத வங்கி. ஆனால் வாடிக்கையாளர் திருப்தி என்பது என்றுமே எட்டாக் கனியாகும். மக்களை பணம் போடுவதில் இருந்து, பணத்தை எடுக்கும் வரை எந்த அளவுக்கு அலைகழிக்க முடியுமோ அந்த அளவுக்கு பொதுமக்களை நோகடித்து விடுவார்கள்.

கடந்த பல நாட்களாக புதிய ரூபாய் நோட்டான 2000 இருப்பில் இல்லாத காரணத்தால், ATM இயந்திரம் பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. அனைத்து பரிவர்த்தனைகளையும் இயந்திரம் மூலம் செயல்படுத்த வலியுறுத்தும் வங்கி நிர்வாகம், பழுதை நீக்குவதற்கு எந்த துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இஸ்லாமியார்களுக்கு புனித மாதமான ரமலான் மாதம் மற்றும் அரசு பணியாளர்களுக்கு மாத சம்பள காலமாகிய இச்சமயத்தில் பணபரிவரத்தனைகள் அதிகம் இருக்கும், ஆனால் ATM இயந்திரம் முறையாக செயல்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.