சமூக வலைதளங்களில் கத்தாருக்கு ஆதரவு தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்…அமீரகம் கண்டிப்பு…

ஐக்கிய அரபு அமீரக செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது 15 வருட சிறை தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த விமர்சனங்கள் எழுத்து மூலமாகவோ, சமூகவலை தளம் மூலமாகவோ அல்லது வாய் வார்த்தையாக இருந்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பாக அரேபியா கூட்டமைப்பில் உள்ள நாடான கத்தார் இடையேயான ராஜாங்க உறவை ஐக்கிய அரபு அமீரகம் துண்டித்தது.அதனை தொடர்ந்து இந்நாட்டில் வசிப்பவர்கள் கத்தார் நாட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவது அமீரகத்தின் நிலைபாட்டுக்கு எதிரானது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கபடுவார்கள் என்று தேசிய வழக்காடு மன்றம் அறிவித்துள்ளது.

எந்த நாட்டில் நாம் வசிக்கின்றோமோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ்வது நம் கடமையாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.