காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன்.. உறுதிபடுத்திய சார்ஜா காவல்துறையின் மனிதநேயம்..

ஐக்கிய அரபு அமீரக சார்ஜாவில் வாடகை செலுத்த தவறியவரை வீட்டின் உரிமையாளர் அக்குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.  இதையறிந்த சார்ஜா காவல்துறை அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்துள்ள செய்தி சமீபத்தில் தீயாக பரவியது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பம் தங்குவதற்கு வீடு இல்லாமல் 20 நாட்களாக சார்ஜா அல் புதீன் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனத்தில் தங்கியிருந்த நிலைமை அறிந்த சார்ஜா போலீஸ் அவர்களுக்கு விடுதியில் தங்க ஏற்பாடு செய்தனர்.

சம்பவம் அறிந்த தலைமை கமாண்டர் பிரிகேடியர் சைஃப் அல் சம்ஸி அல் ஸேரி ஆணை பிறப்பித்து சார்ஜா சமூக அமைப்பின் காவல் துறை அதிகாரி மூலம் அக்குடும்பத்தின் தலைவர் அபு அத்னானை தொடர்பு கொண்டு விசாரனை நடத்தினார். அவ்விசாரனையில் அபு அத்னான் கூறியதாவது, ஆறு மாதாமாக வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள நேரிட்டதால் 6 மாதங்கள் வாடகையை கட்ட தவறியதாக தெரிவித்தார். பிறகு அவர் ஒரு மாத வாடைகையை செலுத்தி விட்டு மிதமுள்ள மாதங்களுக்கு சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் வீட்டின் உரிமையாளர் அவரின் கோரிக்கையை செவி சாய்க்காமல் அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.  திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்வால் நிலைகுலைந்து தேவையான பொருட்களை கூட எடுக்கமுடியாமல், தங்களுடைய வாகனத்திலேயே அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதாக விளக்கினார்.

இதைக் கேட்டறிந்த கால்துறையினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தங்குவதற்கு பல அறைகள் கொண்ட விடுதியை ஏற்பாடு செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.  மேலும் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தது மட்டுமல்லாமல்,  பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் சார்ஜா காவல்துறை முயற்சி செய்வது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை என்றால் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு இருக்க்கூடிய இன்றைய கால கட்டத்தில் காவல் துறையினர் சமுகத்தின் கேடயங்களாய், மனித நேயத்தின் மறு உருவங்களாய், காவல் துறை மக்களின் நண்பன் என்ற வார்த்தைகளுக்கேற்ப செயல் வடிவமாய் விளங்கிய சார்ஜா போலீஸின் இந்த செயல் மிகவும் பாரட்டுக்குறியது.

செயதி மூலம்:- Khaleej Times- UAE.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.