அமீரகத்தில் இருந்து கத்தாருக்கு விமான சேவை தடை…

கத்தார் அரபு கூட்டமைப்பில் உள்ள ஒரு நாடாகும்.  ஆனால் சமீபத்தில் இராஜாங்க உறவில் ஏற்பட்ட விரிசலால் சவுதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் கத்தாருடன் உள்ள அரசாங்க ரீதியான நட்பை துண்டிப்பதாக அறிவித்தது.இதைத் தொடர்ந்து அமீரகத்தை மையமாக கொண்டு  செயல்படும் எமிரேட்ஸ், எத்திகாத், ஏர்அரேபியா மற்றும் ஃபிலை துபாய் போன்ற நிறுவனங்கள் கத்தாருக்கு செய்து வரும் விமான சேவைக்கு ஜீன் 6 2017 முதல் தற்காலிக தடை விதித்துள்ளதாக இந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு இடையேயான வெளியுறவு கொள்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொருளாதர தடையின் காரணமாக விமான சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார தடையின் எதிரொலியாக அடுத்த 48 மணி நேரத்தில் கத்தார் நட்டை சார்ந்தவர்கள் சவுதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற  அறிவிப்பும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..