முக்கிய அறிவிப்பு…

முக்கிய அறிவிப்பு….

அன்பார்நத சகோதர, சகோதரிகளே…

உங்களின் அன்பான தொடர் ஆதரவோடு கீழை நியூஸ் வோர்ல்ட் முதலாம் ஆண்டை விரைவில் தாண்டுகிறது. இறைவன் நாட்டப்படி ரமலான் மாதத்தை தொடர்ந்து கீழை நியூஸ் வோர்ல்ட் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமாக பயணத்தை தொடர இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஊரின் நிகழ்வுகளை இன்னும் முழுமையாக பதியும் நோக்கில் செய்தி மற்றும் வீடியோ செய்தி சேகரிப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களை இணைத்துக் கொள்ள உள்ளோம். கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள மற்ற பகுதியில் உள்ள இளைஞர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம். ஆர்வம் உள்ளவர்கள் klkmakkal@gmail முகவரி அல்லது 00966500818177 வாட்ஸ்அப் எண்ணுக்கு விண்ணப்பங்களை ஆர்வத்துடன் அனுப்பிவைக்கலாம். தமிழ் தட்டச்சு மற்றும் வீடியோ பதிவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் மூத்த நிருபர்களின் மேற்பார்வையில் பணியில் அமர்த்தபடுவார்கள். அதே போல் சென்னை மற்றும் கீழக்கரையில் அமையவிருக்கும் நிர்வாக அலுவலகத்தில் இரண்டு வருட உத்திரவாதத்துடன் பணிபுரிய விரும்பும் நபர்களும் விண்ணப்பங்களை அனுப்பலாம். ரமலான் பெருநாள் கழித்து நேர்முக தேர்வு நடைபெறும்.

மின்னஞ்சல் :- klkmakkal@gmail.com
Whatsapp:- 00966500818177

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.