ரத்த தானத்தினை வலியுறுத்தி 11டன் லாரியை ஒரு விரலால் இழுத்த யோகா மாஸ்டர்..

கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஸ்குமார். யோகா மாஸ்டரான இவர் ரத்த தானத்தினை வலியுறுத்து விதமாகவும், 18 வயது நிரம்பிய அனைவரும் 6 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்ய வேண்டும், ரத்த தானம் செய்வதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11 டன் எடை கொண்ட லாரியை தனது ஒரு விரலால் இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சாதனை நிகழ்வினை மேற்கொண்டார்.

கோவில்பட்டி காந்திமைதானத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிங்ரைசா யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் வரவேற்புரையாற்றனார். சாதனை நிகழ்வினை தமிழ்நாடு விவேகானந்தாயோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலேசாகர் ராஜகோபால் மற்றும் தொழில் அதிபர் விக்னேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11டன் எடை கொண்ட லாரியை யோகாமாஸ்டர் சுரேஸ்குமார் தனது ஒரு விரலால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் முருகானந்தம், மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சி பள்ளி நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கமல் நற்பணி மன்ற தலைவர் சங்கர், விஸ்வகர்மா துவக்கமற்றும் உயர்நிலைப்பள்ளி செயலாளர் பாலமுருகேசன், தொழில்அதிபர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.