சமீபத்திய மும்பை தீபாலி கொலை வழக்கு – பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி..

கடந்த வாரம் மும்பையில் தீபாலி என்ற பெண்மணி உடம்பில் பல முறை குத்தப்பட்டு பிணமாக அவருடைய வீட்டிலிருந்து மீட்கபட்டிருக்கிறார்.  இவர் தயானேஸ்வர் என்ற பிரபல போலிஸ் அதிகாரியின் மனைவியாவார்.  கொலையுண்டவரின் கணவர் கடந்த புதன் அன்று மாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.  ஆனால் அழைப்பு மணி அடித்தும் திறக்காததால் மனைவியும் மகனும் சினிமாவுக்கு சென்றிருப்பார்கள் என்று எண்ணி சாயங்காலம் வரை காந்திருந்துள்ளர். பின்னர் அலைபேசியிலும் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் தன்னிடம் இருந்த மாற்று சாவியை வைத்து திறந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார்.  வீட்டின் உள்ளே சென்றவருக்கும் அதிர்ச்சியாக மனைவி கத்தியால் பல முறை குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.  விசாரனையில் குற்றவாளியாக 19 வயது சித்தான்ட் என்ற சொந்த மகனே கைது செய்யப்பட்ட பொழுது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.  ஆனால் கொலைக்கான காரணத்தை அம்மாணவன் கூறியபொழுது மிகவும் அதிர்ச்சிகரமாகவும் சிந்திக்க கூடியதாகவும் இருந்தது.  அவன் கூறியதாவது “என் தாயாருக்கும் தந்தைக்கும் எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக என் தாய் எப்பொழுமும் என்னை படிக்க சொல்லி நச்சரிப்பதும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எண்ணை துன்புறுத்தியதுமே என்னை கொலை செய்ய தூண்டியது” என்று கூறியது மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. மேலும் கொலை செய்தது மட்டும் அல்லாமல் தாயின் இரத்தத்தால் இவளால் சோர்ந்து விட்டேன் என்னைப் பிடித்த தூக்கிலிடுகங்கள் (TIRED OF HER , CATCH ME AND HANGE ME) என்று இரத்தத்தால் எழுதிவிட்டு சென்றது வெறுப்பின் உச்சக்கட்டத்தை காட்டுகிறது.

இம்மாணவன் பள்ளியில் 92 சதவீதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறான்.  ஆனால் அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு பிடித்தமே இல்லாத பொறியியல் படிப்பில் சேர்த்து இருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து முதல் ஆண்டிலே தேர்வில் அவன் தோல்வியும் அடைந்துள்ளான். அதைத் தொடர்ந்து அவனுடைய தாய் ஒவ்வொரு நிமிடமும் படிப்பை பற்றியே நச்சரித்துள்ளாள் அதன் விளைவு தன் தாயையே கொலை செய்யும் அளவுக்கு மனம் சென்றுள்ளது.

இது பற்றி உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள் கொலை செய்வது ஒரு வெறுப்பின் உச்சம் ஆனால் தொப்புள் உறவான பெற்ற தாயை கொலை செய்வது என்பது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விசயமாக உள்ளது,  ஆனால் இந்த கொலையில் கோபத்தின் உக்கிரமும்,  மனநிலையையும் மிகவும் ஆழமாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றார்கள்.

பெற்றோர்களே, ஆசிரியர்களே சிறிது நேரம் சிந்தியுங்கள் பிள்ளைகளும் மனிதர்கள்தான்,  அவர்களுக்கும் மனம் உள்ளது,  அவர்களுக்கென்று ஆசையும் இருக்கும். அவர்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் மதிப்பெண்கள் மட்டும் பெறுவதற்கு இயந்திரங்கள் அல்ல.  எல்லா குழந்தைகளின் எண்ணங்களும் செயல்களும் ஒன்று போல் இருக்காது.  அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை அறிந்து அவர்களுக்கு தகுந்த கல்வி முறையை அமைத்து கொடுங்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறந்த மேதைகளாக வருவார்கள்.  நாம் அவர்களை சரியான முறையில் வார்த்தெடுக்கவில்லை என்றால் குழந்தைகளின் வாழ்வு சீரழிவதற்கு நாமே காரணமாகி விடுவோம். குழந்தைகளிடம் உங்களின் ஈகோவை காட்டாதீர்கள் நீங்கள்தான் அவர்களுக்கு முன் உதாரணம் நீங்கள் என்ன அவர்களுக்கு கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..