நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…

கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.

இன்று (30-05-2017) இப்பணியிணை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்கரையைச் சார்ந்த வள்ளல் சீதக்காதி புரமோட்டர்ஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதி திரட்டும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இந்நிறுவனத்தின் செயல்பாடு சமூக அக்கறையை வெளிபடுத்தியுள்ளது. இது மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் இந்நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகள் செய்ய வாழ்த்துகிறது.