ரமலான் மாதத்ததில் அதிக நன்மையை கொள்ளையடிக்கும் கீழக்கரை தெற்கு தெரு மக்கள்.. ஏழை எளியோருக்கு நோன்பு வைக்க சஹர் உணவு..

புனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் உள்ளனர்.

மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரை தெற்குத் தெருவச் சார்ந்தவர்கள் ஜமாஅத் ஒத்துழைப்புடன் தினம் 220 தேவையுடைய நபர்களுக்கு சஹர் உணவு தயார் செய்து வழங்குகிறார்கள். இது பற்றி தெற்குத் தெருவைச் சார்ந்த நபர் ஒருவர் கூறுகையில், சஹர் உணவு தினமும் சாயங்காலம் முதல் தயார்படுத்த தொடங்கி இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை திறமே செய்து முடிக்க இளைஞர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து செயல்படுகிறார்கள். இந்தப் பணியை தினமும் சரியான நேரத்திற்குள் தேவையுடையவர்களின் இல்லங்களுக்கே சென்று கொடுக்கப்படுகிறது. இதற்கான செலவினங்களை சுமார் 30 பேர் 15 ஆயிரம் வீதம் பங்கிட்டு இப்பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.

இப்பணி இன்னும் சிறப்பாக அமைய கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இது போன்ற சமூக சேவை செய்திகளை klkmakkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 00966500818177 என்ற WhatsApp எண்ணுக்கு புகைப்படத்துடன் அனுப்பலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..