கெண்டை மீன் தோல் மூலம் தீ காயங்களுக்கு நிவாரணம்…

பிரேசில் நாட்டை சார்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் திலப்பியா என்ற கெண்டை மீன்களின் தோலை பயன்படுத்தி தீ காயங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக தீயினால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மனிதர்களின் தோல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பிரேசில் நாட்டில் திலப்பியா (Tilapia) என்ற கெண்டை மீனின் தோலை எடுத்து அதை சிகிச்சைக்கு பயன்படுத்துவது பரவலாக கணப்படுகிறது.

ஆற்றில் வளரக்கூடிய கெண்டை மீன்  வகைகள் பிரேசில் நாட்டில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மருத்துவ குணம் நிறைந்த அந்த மீன்களின் தோலில் ஈரப்பதமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த புதிய வகையான சிகிச்சை மூலம் வலி குறைந்து விரைவில் குணமடையும், திலாபியா மீனின் தோல் இவ்வகையான சிகிச்சைக்கு ஏதுவாக அமைகிறது.  தீக்காயத்துக்காக செய்யப்படும் மற்ற சிகிச்சையின்  செலவோடு ஒப்பிடும் போது சாதாரண முறையில் செய்யப்படும் செலவை காட்டிலும் 75% குறைவாகவே மதிப்படப்படுகிறது..

தற்போதய நவீன காலகட்டத்தில் தீ காயங்களுக்கு நிவாரணியாக திலாபியா மீன் தோல் மூலம் செய்யப்படும் புதிய வகையான சிகிச்சை முறை என்பது மருத்து உலகின் மற்றும் ஓர் மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.