கீழக்கரையும்.. நோன்பு கஞ்சியும்…

இன்று கீழக்கரையில் முதல் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. நோன்பை எந்த அளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போமோ அதுபோல் கீழக்கரை பள்ளி வாசல்களில் அசர் நேரத் தொழுகைக்குப் பிறகு ஊற்றப்படும் நோன்பு கஞ்சிக்கு காத்திருக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நோன்பு கஞ்சி பெரியவர் முதல் சிறியவர் வரை, செல்வந்தர் முதல் வறியவர்கள் வரை எந்த பாகுபாடின்றி வாங்கி செல்லும் காட்சியை நோன்பு காலங்களில் காண முடியும். பள்ளிகளில் ஊற்றப்படும் கஞ்சிக்கு நிகர் எதுவும் கிடையாது.

இன்று முதல் கீழக்கரையில் அனேக பள்ளிகளில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடங்கி விட்டது, இது கடைசி நோன்பு வரை கிடைக்கும், அதற்கு பின்னர் இந்த சுவையான நோன்பு கஞ்சிக்கு அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.

வடக்குத் தெருவில் கஞ்சி வாங்கி செல்லும் காட்சி:-

தெற்கு தெருவில் கஞ்சி வாங்கி செல்லும் காட்சி:-

1 Comment

  1. மத பாகுபாடு இன்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக தொன்று தொட்டு வழங்க படுகிறது.

Comments are closed.