பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..

சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான விசயம் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் வாழ்கையில் வெற்றி பெற்றவர்கள் இல்லை, அதே போல் மிக சாதாரண மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எல்லாம் வாழ்கையில் தோல்வி பெற்றவர்களும் கிடையாது. ஆனால் இந்த இரு வகையான மாணவச் செல்வங்களும் வாழ்கையை கையாளும் முறையை வேறு விதங்களில் எடுத்துள்ளார்கள்.

சமீபத்தில் இந்துஸ்தான் பத்திரிக்கை பரிட்சை முடிவுகள் வெளிவரும் நாட்களில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் மனநிலையைப் பற்றி குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் மனோதத்துவ மருத்துவர்கள் கூறுவதாக சொல்லப்பட்டிருந்த இரண்டு விசயம் மிகவும் அதிர்ச்சியைத் தரக் கூடியதாக உள்ளது.  முதல் விசயம் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கூட மனதில் கொள்ளாமல் குழந்தைகளை சிறந்த கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்கிறார்கள் என்கிறது. இரண்டாவதாக கூறப்பட்டுள்ள கருத்து மிகவும் வேதனையளிக்க கூடியதாகவும் தீர சிந்திக்க கூடியதாக உள்ளது. அதாவது அதிகபட்சமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை கொள்வதற்காகவே பிள்ளைகள் மேல் அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள் என்கிறது. இதனுடைய விளைவு பிள்ளைகளுக்கு படிப்பின் மீதே ஒரு வெறுப்பை உண்டாக்கி பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.

இன்று நாம் நடைமுறையிலேயே பிள்ளைகள் பரிட்சை முடிவுகளை கூறியவுடனே கேட்பவர்கள் கேட்கும் உடனடி கேள்வி எத்தனை மதிப்பெண் ? என்பதுதான். சில பெற்றோர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளைகளின் மனதை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக மறைத்தாலும் சில பேர் அந்த நோக்கத்தை புரியாமல் கூடுதல் மதிப்பெண் எடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் வேதனைக்குரியது. இது மிகைப்படுத்துதல் அல்ல, பரிட்சை முடிவுகள் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பு மாணவர்கள் டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் அவர்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்த காட்சிகளே சாட்சி…

ஒரு மாணவன் தன் சொந்தங்களுக்கு மதிப்பெண் முக்கியமில்லை என்பதை விளக்குவதாக…

மற்றொரு மாணவன் பரிட்சை முடிவுகள் வரும்பொழுது சொந்தங்களின் முகபாவனையை.. இன்னும் சில கீழே…

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.