கீழக்கரையில் ரமலான் மாதத்தின் குதூகலம் ஆரம்பம்..

இஸ்லாமிய சமுதாயத்தின் புனிதமிக்க மாதம் ரமலான் மாதம். பாவங்கள் மன்னிக்கப்படக் கூடிய மாதம். தான தர்மங்கள் வாரி வழங்கப்படும் மாதம் இந்தப் புனித ரமலான் மாதம்.

கீழக்கரையில் இந்த புனித மாதம் ஆரம்ப நாட்களில் பெண்கள் சொந்த, பந்தங்களின் வீடுகளுக்கு சென்று முகமன்களை பரிமாறிக் கொள்வார்கள். அனேக குடும்பத்தினர் இந்த புனித மாதத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக உண்டாக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

இந்த ரமலான் மாதம் முழுவதுமே தொழுகை பள்ளி வாசல்களும், கடைத் தெருக்களும் விழாக் கோலம் பூண்டு இருக்கும். இத்தருணத்தில் கீழை நியூஸ் வோர்ல்ட் நிர்வாகமும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..