இஸ்லாமியா பள்ளியின் ரமலான் மாத சிறப்பு வேலை நேர அறிவிப்பு..

தமிழகத்தில் இந்த வருடம் கடுமையான வெப்பத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒரு வாரம் காலம் தாமதமாக ஜூன் மாதம் 07ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதமும் இன்று (27-05-2017) இரவு முதல் தமிழகத்தில் தொடங்குகிறது. இன்று தொடங்கி ஒரு மாதம் காலம் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் ரமலான் மாதத்தில் பள்ளி வேலை நேரத்தை கீழக்கரை இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் காலை 09.15 முதல் பகல்  01.00 மணி வரை குறைத்து மாற்றியமைத்துள்ளார்கள். மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு சலுகை வழங்குவதிலும் முன்னோடியாகத்தான் உள்ளார்கள்.