Home செய்திகள்கீழக்கரை செய்திகள் புறா மூலம் போதை பொருள் கடத்தல்…நவீன உலகின் நவீன கடத்தல்..

புறா மூலம் போதை பொருள் கடத்தல்…நவீன உலகின் நவீன கடத்தல்..

by Mohamed

பண்டைய காலத்தில் தூது விடவும் செய்திகளை அனுப்பவும் வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள்தான்  உதவியாக இருந்தது.  தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் அஞ்சல் சேவையை வீட்டு புறாக்கள் மூலம் பூர்த்தி செய்து கொண்டனர்.

வீட்டில் வளர்க்கப்படும் புறா இனத்தை பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விட்டு சென்றாலும் அதன் இருப்பிடத்தை துல்லியமாக அடையாளம் கண்டு  மீண்டும் வந்தடையும் திறன் கொண்டதாக இருக்கிறது.

வீட்டு புறா இனத்தில் பல  வகை உள்ளது, அதில் சில வகையை சார்ந்த புறாக்கள்  பந்தயம் விடுவதற்காக வீட்டில் செல்லமாக  வளர்க்கப்படுவது இன்றும் வழக்கமாக உள்ளது. மனிதர்களிடத்தில் எளிதாக  பழகும் தன்மையுடையதால் நம் இலக்கை கண்டறிவதற்கும், அதிக நேரம் பறப்பதற்கும் புறாக்களுக்கு பிரத்யோக பயிற்சியும், புரோத சத்து நிறைந்த உணவும்  வழங்கப்படுகிறது.

புறாக்களை பந்தயத்திற்காக தயார் செய்து பல போட்டிகளை நடத்தி வரும் இன்றைய நவீன காலகட்டத்தில் அதை தவறான வழியிலும் சிலர் பயன் படுத்துகிறார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.

சமீபத்தில் போதை பொருள் கடத்துவதற்காக பயன்படுத்திய வளர்ப்பு புறாவை குவைத்தின் சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர். சுமார் 178 மாத்திரைகளை ஒரு பையில் அடைத்து அதை புறாவின் முதுகு மேல் சுற்றப்பட்டு இராக்கிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அல் அரேபியா செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலே, போதை கடத்தலுக்கு பயன்படுத்திய வளர்ப்பு புறாவை சுங்கத்துறை அலுவலகத்தின் அருகில் உள்ள கட்டிடத்தின் மேல் வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.  ஆனால் எந்த வகையான மாத்திரைகள் என்று சுங்க அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!