ரமலானை வரவேற்று தமுமுக மற்றும் மமக சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

இராமநாதபுரம் நகரில்  ” புனித ரமலான் (நோன்பை) வரவேற்போம்” விளக்க பொதுக்கூட்டம் சின்னக் கடை வீதியில் தமுமுக மற்றும் மமக சார்பாக 20-05-2017 அன்று சிறப்பாக நடைப்பெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில் கோவை ஜாஹிர்,தலைமை கழக பேச்சாளர்-தமுமுக, கோவை அஸ்கர், இஸ்லாமிய அழைப்பாளர், முகவை பீர் முகம்மது, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர், தமுமுக, ஹனிப் ரஷாதி, மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் ஆகியோர் சிறப்பரையாற்றினர்.

இதில் தமுமுக மாநில தேர்தல் அதிகாரி வாணி சித்திக், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பனைக்குளம் பரகத்துல்லாஹ், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி, ஜாஹிர் உசேன், பாக்கர், திருப்புலாணி ரைஸ், இலக்கிய அணி பாடகர்.SK, கீழக்கரை தமுமுக நகர் செயலாளர் சீராஜ், ஊடகபிரிவு மாவட்ட பொருளாளர் ஆற்றாங்கரை அஃபான் மற்றும் நகர் நிர்வாகிகள் தமுமுக செயலாளர் புரோஸ், மமக செயலாளர் மன்சூர், பொருளாளர் சதக் தம்பி மற்றும் முன்னாள் நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.