கீழக்கரை தாலுகா ஆலங்குளத்தில் அம்மா திட்ட முகாம்…

கீழக்கரை தாலுகா ஆலஙகுளம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

இம்முகாமில் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 15 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இம்முகாமில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் கோகிலா, கிராம நிர்வாக அலுவலரகள் கோகிலா தேவி பூபதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஆலங்குளம் குமாரவேல் , நல்லிருக்கை ராஜா உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.