10ம் வகுப்பு தேர்வு முடிவு.. மாநில அளவில் இராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடம்…

இன்று (19-05-2017) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த வரும் விருதுநகர் மாவட்டம் , கன்னியாகுமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் என முதல் மூன்று இடங்களில் வந்துள்ளது.

இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 17979 மாணவர்கள் பரிட்சை எழுதினர். இதில் மாணவர்கள் 8814 பேரும், மாணவிகள் 9165 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 96.46 சதவீதமும், மாணவிகள் 98.83 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 248 பள்ளிகளில் 157 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டை விட இந்த வருடம் 26 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் இந்த வருடம் 18 அரசு பள்ளிகளும் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கீழக்கரையிலும் அனைத்து பள்ளிகளும் தேர்ச்சி விகிதத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.