அமீரகத்தில் காயிதே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா..

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிரே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா இதயங்கள் காப்போம்சமய நல்லிணக்கம் காப்போம் என்ற முழுக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்விழா  19-05-2017 வெள்ளிக் கிழமை அன்று மாலை 07.00 மணியளவில் அபுதாபியில் மினா துறைமுகம் அருகில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் ( Indian Social and Cultural Centre, Abudhabi, Near. Mina port) நடைபெறுகிறது.

இவ்விழாவில் காயிதே மில்லத்தாய் வாடும் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் ஸாஹிப் என்ற தலைப்பில் பேரவையின் வெள்ளி விழா சிறப்பு வெளியீடு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.ஏம் முஹம்மது அபுபக்கர் மற்றும் தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜஹான் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்

இந்நிகழ்ச்சியில் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் பெண்களுக்கென தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்தும் நெஞ்சங்களுடன்  கீழை நியூஸ் நிர்வாகமும் இணைந்து கொள்கிறது.