இராமநாதபுரத்தின் பிதாமகன் இன்று மக்கள் போற்றும் “கௌரவமகன்” ஆனார்..

இராமநாதபுர நகரின் பிதாமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னக்கடை, அருப்புக்கார தெருவை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு இராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பாக மனித நேயர் விருது மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அமீர் ஹம்சா அனாதை பிணங்களை அவர்களுடைய வழக்கப்படி அடக்கம் செய்வது. அதுமட்டுமல்லாமல் கிணற்றில் இறந்தவர்கள், தூக்கிட்டு இறந்தவர்கள், சாலை விபத்தில் இறந்தவர்கள், கடல், குளங்களில் இறந்தவர்கள் போன்ற 15000க்கும் மேற்ப்பட்டோர்களை அவரது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார். காவல்துறையினரோ, தீயணைப்பு துறையினரோ மீட்க முடியாத உடல்களை இவர்தான் மீட்டு வருகிறார். சொந்தமாக ஆம்புலன்ஸ் சேவையும் செய்து வருகிறார்.

இவருடைய இந்த மனித நேய செயலை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மன திருப்திக்காக மட்டுமே செய்து வருகிறார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.