இராமேஸ்வரம் – சென்னை செல்ல வேண்டிய ரயில் தாமதம் – பயணிகள் அவதி..

இராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் இரவு 9.20க்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைய வேண்டிய ரயில் நள்ளிரவு ஒரு மணி வரை இராமநாதபுரம் வந்து சேரவில்லை. தொடர்ந்து பயணிகள் காரணம் கேட்ட பொழுது பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசுவதாகவும் அதனால் தாமதம் என்று மிக அலட்சியமான பதிலே வந்துள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பை பயணிகளுக்கு ஒலி பெருக்கி முலம் அல்லாது, சதாரண நடையில் மிக அலட்ச்சியமான முறையில் பயணிகளிடம் பதில் கூறப்பட்டது.பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய ஸ்டேசன் மாஸ்டரோ மக்களுக்கு பதில் சொல்லாமல் கால் மேல் கால் போட்ட வண்ணம் பொதுமக்களை அலட்சியப்படுத்தியுள்ளார். இது மிகவும் கண்டிக்க பட வேண்டிய விசயம். டிஜிட்டல் இந்தியாவாக மார் தட்டிக் கொள்ளும் அரசாங்கம், இது போன்ற தாமதங்களை டிக்கெட் பதிவு செய்யப்படும் பொழுது பெறப்படும் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பினால், வெகு தூரத்தில் இருந்து பயணம் செய்ய வரும் வயோதிகர்கள் மற்றும் சிறுவர்கள் இது போன்ற சிரமங்களை தவிர்க்க முடியும். அரசாங்கம் செவி சாய்க்குமா??