கீழக்கரை நகராட்சி சார்பாக “தேசிய டெங்கு தினம்”..

கீழக்கரையில் இன்று (16-05-2017) நகராட்சி சார்பாக “தேசிய டெங்கு தினம்” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு டெங்கு கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் முறை மற்றும் முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் முறை ஆகிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது, அதைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

பின்னர் இன்றைய நிகழ்வின் ஒரு பகுதியாக மாலை 3.30 மணியளவில் நகராட்சி தலைமை எழுத்தாளர் சந்திரசேகர் மற்றும் ஆணையர் வசந்தி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கிழக்குத் தெரு, வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி செய்திருந்தார்.