தமிழக போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் – பல இடங்களில் சமூக விரோதிகள் வன்முறை செயல்..

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்து உள்ளது. இப்போராட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் 70 சதவீதம் பேருந்துகள் ஓடியதாக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 360 அரசு பேருந்தில் வெறும் 11 பேருந்துகளே இன்று முறையான பயன்பாட்டில் இருந்துள்ளது. இதற்கிடையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டனர். இராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடி சென்ற அரசுப்பேருந்தின் பின்புறக் கண்ணாடி கல் எறிந்து உடைக்கப்பட்டது. இச்சம்பவம் கீழக்கரை புல்லந்நை அருகே நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..