ஜும்மா பள்ளி சாலை உடனடியாக சீர் செய்யப்பட்டது – புதிய ஆணையர் நடவடிக்கை..

கடந்த வாரம் கீழக்கரை ஜும்மா பள்ளி சாலையில் அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் பிரச்சினை பற்றி கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இது சம்பந்தமாக கீழை நியூஸ் நிர்வாகிகள் முஜம்மில் மற்றும் சாலிஹ் ஹுசைன் நேற்று (10-05-2017) நேரடியாக ஆணையரை சந்தித்து கீழக்கரையில் உள்ள சுகாதார பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளையும் சந்தித்து விளக்கினார்கள்.

ஆணையர் பிரச்சினையை கேட்டறிந்தவுடன் களத்திற்கு உடனடியாக சென்று ஆய்வுகள் செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். அதே போல் வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளி பகுதியில் நிரந்தரமாக தேங்கி கிடக்கும் சாக்கடை பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

புதிய ஆணையரின் உடனடி நடவடிக்கைக்கு கீழை நியூஸ் நிர்வாகம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

கடந்த வாரம் நாம் வெளியிட்ட செய்தி உங்கள் பார்வைக்கு:-

நிரந்தர சுகாதார தீர்வுக்காக காத்திருக்கும் கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் சாலை..