Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி

தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி

by ஆசிரியர்

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார்.

இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை மனு அளித்துள்ளார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் இந்திய ராணுவத்திற்காக நமது பங்களிப்பை ஏதாவது வகையில் வழங்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பம் முதல் இருந்தது. இந்திய திருநாட்டிற்காக தனது குடும்பத்தையும் மறந்து நமக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பயன்பெறும் வகையில் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

எனக்கு இதுவரை எந்த உடல்நலக்குறைவும் ஏற்பட்டதில்லை. மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டதில்லை. நல்ல நிலையில் உடலை பராமரித்து கொண்டிருக்கும் எனக்கு இந்த உடலை பயன்பெறும் வகையில் ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளேன். நான் இறந்த பின்பு, எனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வயதான காலத்தில் தனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்காக ஒப்படைக்க முன்வந்தவரின் செயல் அனைவரையும் நெகிழச்செய்தது. நாட்டிற்காக தியாகம் இப்படியும் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!